Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குஜராத் அரசியல்வாதி திருமணத்திற்கு பணம் ரூ.331 கோடியை செலவழித்த பைக் டாக்ஸி டிரைவர்: அமலாக்கத்துறை அதிர்ச்சி

புதுடெல்லி: குஜராத் அரசியல்வாதி திருமணத்திற்கு ரூ.331 கோடியை பைக் டாக்சி டிரைவர் செலவழித்து இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குஜராத் மாநிலம் இளம் அரசியல்வாதி ஆதித்யா ஜீலாவிற்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் ரிசார்ட்டில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டது. இந்த பணம் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. திருமண செலவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, டெல்லியில் பைக் டாக்ஸி டிரைவர் வங்கி கணக்கிற்கு ரூ.331.36 கோடி அனுப்பப்பட்டதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

விசாரணை நடத்திய போது, கடந்த ஒரு வருட காலத்தில் மட்டுமே இந்தளவுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த பணம் முழுவதும் சூதாட்ட செயலியில் இருந்தது வந்தது என்பது தெரியவந்தது. மேலும் ராபிடோ பைக் ஓட்டுநரின் வங்கிக் கணக்கிலிருந்து உதய்பூரின் தாஜ் ஆரவல்லி ரிசார்ட்டில் நடந்த ஆடம்பரமான திருமணத்திற்கு பணம் சென்றது தெரிய வந்துள்ளது.

2024 ஆகஸ்ட் முதல் 2025 ஏப்ரல் 2025 வரை பணம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மணமகள் அல்லது மணமகனுடன் பைக் டாக்சி டிரைவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.