Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குஜராத் நீதிபதி மீது ஷூ வீச்சு

அகமதாபாத்: நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ​​குஜராத்தில் உள்ள அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மீது ஒரு நபர் ஷூ வீசினார். அவரை போலீசார் பிடித்தனர். இருப்பினும் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அந்த நபர் விடுவிக்கப்பட்டார் என்று கரஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் பி.எச். பாட்டி கூறினார்.