Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத் ஐஐடியில் ஆசிரியரல்லாத பணிகள்

குஜராத், காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (Indian Institute of Technology) காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Librarian: 1 இடம் (பொது). வயது: 57க்குள்.

2. Superintending Engineer: 1 இடம் (பொது). வயது: 50க்குள்.

3. Deputy Librarian: 1 இடம் (பொது). வயது: 50க்குள். இந்த இடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. Medical Officer: 1 இடம் (பொது). வயது: 45க்குள்.

5. System Analyst: 1 இடம் (பொது). வயது: 45க்குள்.

6. Assistant Engineer: (Civil/Electrical): 2 இடம் (பொது). வயது: 32க்குள்.

7. Junior Engineer: (Civil/Electrical): 1 இடம் (பொது). வயது: 32க்குள்.

8. Junior Superintendent: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 32க்குள்.

9. Junior Accounts Officer: 1 இடம் (ஒபிசி). வயது: 32க்குள்.

10. Library Information Assistant: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 27க்குள்.

11. Assistant Staff Nurse: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 27க்குள்.

12. Junior Laboratory Assistant: 15 இடங்கள் (பொது-10, ஒபிசி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 27க்குள். 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

13. Junior Assistant: 11 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்- 1, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-2) 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

14. Junior Accounts Assistant: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1).

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://www.iitgn.ac.in/Careers/non-academic-staff என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2024.