கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
சென்னை: கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெறுகிறது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் நடக்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றுள்ளார். 14 கடலோர மாவட்டங்களில் Fish Net Initiative, தனுஷ்கோடியில் ஃபிளமிங்கோ பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது.