கூடலூர் மற்றும் பந்தலூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை கட்டுப்படுப்படுத்த வலியுறுத்தல்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை கட்டுப்படுப்படுத்த கோருவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இருபகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கூடலூர் மற்றும் பந்தலூரில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் காட்டுயானைகளில் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளில்உலாவருவதும், விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதும், ஒரு சில நேரங்களில் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காட்டு யானைகளுடைய நடமாட்டம் ஆனது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வியாபாரி சங்கத்தினர் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி என்பது தமிழக கேரளா எல்லை பகுதியில் அமைத்துள்ளது.
வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து இந்த காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அதுமட்டும் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை இருக்கக்கூடிய குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளில் சீரமைக்கவேண்டும் என இருகோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போரட்டம் நடைபெற்று வருகிறது.