Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் காவல் ஆணையாளர் அருண்

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1.இராஜமங்கலம் காவல் நிலைய 2022ம் ஆண்டு ALPRAZOLAM போதைப்பவுடர் வைத்திருந்த NDPS வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

V-4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 16.07.2022 அன்று ரெட்டேரி மீன் மார்கெட் சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு ALPRAZOLAM என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பான NDPS வழக்கில் ஏழுமலை, வ/22, கொளத்தூர் என்பவரை கைது செய்து, 250 கிராம் ALPRAZOLAM போதைப் பவுடர் பறிமுதல் செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கு சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று, V-4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் A.கண்ணன் (தற்போது H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்) தலைமையிலான காவல் குழுவினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், நீதிமன்ற விசாரணையை தொடர்ச்சியாக கண்காணித்து, வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 08.10.2025 அன்று எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஏழுமலை என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

2. தேனாம்பேட்டை பகுதியில் அண்ணா அறிவாலயத்திற்குள் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கண்டறிந்து துரிதமாக தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் திரு.T.கிறிஸ்டோபர்

கடந்த 27.10.2025 காலை 8.30 மணியளவில் நிர்மலா, வ/60, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் என்பவர், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயம் நுழைவு வாயில் அருகே வந்து நின்று கொண்டிருந்தவரை அங்கு பணியில் இருந்த V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் T.கிறிஸ்டோபர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அந்தப் பெண் அரை லிட்டர் கேனில் மண்ணெண்ணெயுடன் மறைத்து வைத்திருந்து கையில் எடுத்தது தெரியவந்ததின் பேரில், அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

3. சூளைமேடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய முதியவரை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய காவலர்.

சென்னை, சூளைமேடு, கோசுமணி தெருவில் வசித்து வரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பழனி, வ/74 என்ற முதியவர் கடந்த 22.10.2025 அன்று விடியற்காலை, வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, பெய்து வரும் மழை காரணமாக, அருகிலிருந்த கூவம் ஆற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அப்பொழுது முதியவர் பழனி சற்று தொலைவில் உள்ள சிறிய பைப் ஒன்றை பிடித்து சத்தம் போடவே, அருகிலிருந்த நபர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், அங்கு விரைந்து வந்த F-5 சூளைமேடு காவல் நிலைய காவலர் S.சரத்குமார் (கா.55267) ஓடிச் சென்று பார்த்து உடனடியாக கூவத்தில் இறங்கி உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்து அவரது மனைவியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

4. காவல்துறையின் துரித நடவடிக்கையால் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற இருந்த கொலை தடுக்கப்பட்டது ஒரு இளஞ்சிறார் உட்பட 4 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்த தலைமைக் காவலர்கள்.

H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் R.சரவணக்குமார், (த.கா.25944), S.மதன் (த.கா.44275) ஆகியோர் கடந்த 28.10.2025 அன்று இரவு 11.30 மணியளவில் திருவொற்றியூர், டி.எச்.ரோடு, அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த 4 இளைஞர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் கத்தி வைத்திருந்தது தெரியவந்ததின்பேரில், அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 1.லோகேஷ்வரன், வ/20, 2.ஜெயராஜ், வ/ வ/20, 3.பார்த்திபன், வ/22 என்பதும் மற்றொருவர் 17 வயதுடைய இளஞ்சிறார் என்பதும் தெரியவந்தது. மேற்படி நபர்கள் அதே பகுதியைச்சேர்ந்த தீபக் என்பவரை வேலைக்கு வரும் பொழுது கொலை செய்ய திட்டமிட்டு, தயார் நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

5.சென்னையில் நுண்ணறிவு தகவல் சேகரித்து திறம்பட பணியாற்றிய நுண்ணறிவுப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்

நுண்ணறிவுப்பிரிவு NSD காவல் ஆய்வாளர் D.ராஜ்பாபு, பூக்கடை காவல் மாவட்ட உதவி ஆய்வாளர் குகன், NSD சிறப்பு உதவி ஆய்வாளர்கள் N.விஜயகுமார், K.சங்கர், S.ரகுராமன், இரண்டாம் நிலை காவலர்கள் P.A.கிரிஸ், R.யுவராஜ் ஆகிய காவல் ஆளிநர்கள் நுண்ணறிவு தகவல்கள் சேகரித்து, உரிய நேரத்தில் காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மேற்படி சட்டம், ஒழுங்கு பிரச்சனை நடக்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அசம்பாவித சம்பவகங்கள் ஏதும் நடைபெறாமல் தடுத்து திறம்பட பணியாற்றியுள்ளனர்.

V-4 ராஜமங்கலம் காவல் நிலைய போதைப்பொருள் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தந்த தற்போதைய H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் A.கண்ணன்,

மண்ணெண்ணெய் கேனுடன் அண்ணா அறிவாலயத்திற்குள் நுழைய முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் T.கிறிஸ்டோபர், சூளைமேடு பகுதியில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட F-5 சூளைமேடு காவல் நிலைய காவலர் S.சரத்குமார், திருவொற்றியூர் பகுதியில் கொலை சம்பவத்தை தடுத்து குற்றவாளிகளை கைது செய்த H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் R.சரவணகுமார், S.மதன், சென்னை காவல்துறையில் முன்கூட்டியே நுண்ணறிவு தகவல் சேகரித்து திறம்பட பணியாற்றிய நுண்ணறிவுப்பிரிவு NSD காவல் ஆய்வாளர் D.ராஜ்பாபு, பூக்கடை காவல் மாவட்ட உதவி ஆய்வாளர் குகன், NSD சிறப்பு உதவி ஆய்வாளர்கள் N.விஜயகுமார்,

K.சங்கர், S.ரகுராமன், இரண்டாம் நிலை காவலர்கள் P.A.கிரிஸ், R.யுவராஜ் என மொத்தம் 12 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண் இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, துணை ஆணையாளர்கள் நலன் மற்றும் எஸ்டேட், நிர்வாகம் மற்றும் தலைமையிடம் உடனிருந்தனர்.