ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை!
டெல்லி: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பெண்கள், விவசாயிகள் பயன்பெறுவார்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மூலம் மக்கள் குறைந்த செலவில் விருப்பமானதை வாங்க முடியும். நவராத்திரி தொடக்க நாளில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டு மக்களின் சேமிப்பு திருவிழாவாக இருக்கும். ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.