புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியிருப்பதாவது: கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோதே, இது ‘கப்பர் சிங் வரி’ என ராகுல் காந்தியும் காங்கிரசும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினர். ஜிஎஸ்டியை சீர்திருத்த வேண்டும் என்று நாங்கள் 2017 முதல் கூறி வருகிறோம். ஆனால் 8 ஆண்டுகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம் போதுமானதாக இல்லை. பல நடைமுறை சிக்கல்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை. வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட இன்னும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற மாநிலங்களின் கோரிக்கை உட்பட பல தீர்க்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த சீர்திருத்தம் காங்கிரஸ் கோரி வரும் ஜிஎஸ்டி 2.0 அல்ல. வேண்டுமென்றால் இதை ஜிஎஸ்டி 1.5 என்று அழைக்கலாம். ஆழமான காயத்திற்கு சிறிய கட்டு போட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்ததற்காக இந்த அரசு முதலில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
+
Advertisement