சென்னை: மக்களுக்கு சுமையாக இருந்ததால் தான் ஜிஎஸ்டியை குறைத்துள்ளீர்கள். மக்களுக்கு சுமையாக இருக்கிறது என தெரிந்தும் வரியை விதித்த நீங்கள் என்ன தலைமையாளர்கள்? என சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கிறீர்கள். ஜிஎஸ்டி-க்கு பிறகு கடையே வியாபாரத்திற்கு வந்துவிட்டது. இந்த நாட்டில் பிறந்ததை தவிர்த்து நாங்கள் வேறு என்ன பிழை செய்தோம்? தரகர்களை தலைவர்களாக்கியதால் அவர்கள் இஷ்டத்திற்கு வரி விதிக்கின்றனர் என்று கூறினார்.
+
Advertisement