ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின்போது மாநிலங்களின் வருவாய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின்போது மாநிலங்களின் வருவாய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் வருவாயை உறுதிசெய்யாவிட்டால் ஜிஎஸ்டி சீர்திருத்தம் பயன் அளிக்காது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை வரவேற்கும் அதே நேரத்தில் மாநில வருவாய் பறிபோய்விடக்கூடாது. மாநில வருவாயை கொண்டுதான் நலத்திட்டங்கள், அடிப்படை கட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.