புதுடெல்லி: மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளன அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பால் எஸ்-பிரஸ்ஸோ கார்கள் விலை ரூ. 1,29,600 வரை குறைக்கப்பட்டுள்ளது. துவக்க விலை ரூ.3,49,900. இதுபோல் மாருதி ஆல்டோ விலை ரூ.1,07,600 வரை குறைக்கப்பட்டு, துவக்க ஷோரூம் விலை ரூ.3,69,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற மாடல்களை பொருத்தவரை செலரியோ துவக்க ஷோரூம் விலை ரூ.4,69,900 (ரூ.94,100 வரை குறைப்பு),
வேகன் ஆர் ரூ.4,98,900 (ரூ.79,600), இக்னிஸ் ரூ.5,35,100 (ரூ.71,300), ஸ்விப்ட் ரூ.5,78,900 (ரூ.84,600), பலேனோ ரூ.5,98,900 (ரூ.86,100), டூர் எஸ் ரூ.6,23,800 (ரூ.67,200), டிசையர் ரூ.625,600 (ரூ.87,700), பிரஸ்ஸா ரூ.8,25,900 (ரூ. 1,12,700), ஜிம்னி ரூ.12,31,500 (ரூ.51,900), எக்கோ ரூ.5,18,100 (ரூ.68,000), எர்டிகா ரூ.8,80,000 (ரூ.46,400) என குறைக்கப்பட்டுள்ளது.