8 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மக்களுக்கே திருப்பி தருமா மோடி அரசு: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் கேள்வி
லக்னோ: சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், ஜிஎஸ்டி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே போனது என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். உத்தர பிரதேச பாஜ அரசாங்கத்தின் மகாகும்ப மேளா திட்டம் போல மொத்தத் தொகையும் மக்களின் வீடுகளுக்கு ரொக்கமாக வழங்கப்படுமா? அடுத்த காப்பீட்டு பிரீமியத்தில் சரிசெய்யப்படுமா, நேரடி பலன் பரிமாற்றமாக வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுமா, மோடி முன்னர் உறுதியளித்த ரூ. 15 லட்சத்தில் இருந்து கழிக்கப்படுமா? என தெரியவில்லை. மேலும், மானிய விலையில் எல்பிஜி காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற நீண்டகால வாக்குறுதியுடன் இந்தத் தொகை விநியோகிக்கப்படுமா? பாஜவால் நிறுவனங்களிடமிருந்து பின்கதவு வழியாக பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதியைப் பயன்படுத்தி இது செலுத்தப்படுமா? அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.