கோவில்பட்டி: தமிழ்நாடு தீப்பெட்டித் தொழிலின் நூற்றாண்டு விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இம்முறை ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை. புரட்சி செய்யப்பட்டுள்ளது.
அந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறோம். 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது. 10 சதவீதம் குறைத்துள்ளோம். 28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஆதாயம் மக்களுக்கான சேமிப்பு தான். வரிக்குறைப்பினால் கிடைக்கும் சேமிப்பை குடும்ப நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.