ராய்ப்பூர்: தவறான ஜி.எஸ்.டி.,யால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சருமான பூபேஷ் பாகல் குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகல் கடந்த 8 ஆண்டுகளாக தவறான ஜி.எஸ்.டி.,யை விதித்து நாடு கொள்ளை அடிக்கப்பட்டது என்று விமர்சித்தார். வணிகங்கள் அழிக்கப்பட்டன சாதாரண மக்களின் வருமானம் மிகவும் குறைந்து போனது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது என்று அவர் கூறினார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், வணிகங்களுக்கு உதவுவோம் என்ற வாக்குறுதிகளை அளித்தது பா.ஜ.க., பல அடுக்குகள் வரி விதித்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டதாக சாடினார். பிரதமருக்கு பொருளாதார நிலைமை பற்றிய புரிதல் இல்லை. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் மக்கள் எவ்வளவு சேமிப்பார்கள், ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ. 115 சேமிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் என்ன நாடாகும், மக்கள் மாதத்திற்கு ரூ. 115ஐ வைத்து என்ன செய்வார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினர்.