சென்னை: 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே; இந்திய குடும்பங்கள் பல கோடி ரூபாயை எப்போதே சேமித்து இருக்குமே என என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களுக்கு நியாயமாக தரவேண்டிய நிதியை மறுக்கிறது. இந்தி திணிப்பை ஏற்கமறுக்கும் ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பு சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கில் இருந்துதான் செய்யப்படுகிறது. தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
+
Advertisement