டெல்லி: 28% இருந்து 18%ஆக ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை அடுத்து எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை குறையும் என்ற விவரம் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது.
குறிப்பாக, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், டிவி, ஏசி, சிறிய ரக கார் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. கார்கள் எவ்வளவு விலை குறையும் என்ற விவரம் பின்வருமாறு; ரூ.4.23 லட்சமாக உள்ள மாருதி ஆல்டோ கார் விலை ரூ.42,000 குறையும். மாருதி ஸ்விஃப்ட், ஸ்விஃப்ட் டிசையர் காரின் விலை சுமார் ரூ.60,000 குறையும். மாருதி சுசூகி எஸ்-பிரஸோ காரின் விலை ரூ.43,000 குறையும். ரூ.5.98 லட்சமாக உள்ள ஹூண்டாய் ஐ 10 காரின் விலை ரூ.47,000 குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டாடா டியாஜியோ காரின் விலை ரூ.50,000மும், டாடா நெக்சான் காரின் விலை ரூ.80,000மும் குறையும். ரெனால்ட் குவிட் காரின் விலை சுமார் ரூ.40000 குறையும். ஹூண்டாய் கிரெட்டா காரின் விலை 3 சதவீதம் குறையும். மகிந்திரா தார் காரின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை குறையும். மகிந்திரா ஸ்கார்பியா, டெயோடா இன்னோவா, பார்ச்சுனர் கார்களுக்கு 50% வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி 10 சதவீதம் குறைவதால் ஸ்கார்பியோ, இன்னோவா, பார்ச்சுனர் கார்கள் விலை குறையும்.