கேரளா: ஜிஎஸ்டி உயர்வால் கேரளாவில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை மந்தமாகி உள்ளது. கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டுகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டது. புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பால் லாட்டரி சீட்டுகளுக்கு 40% வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வால் லாட்டரி சீட்டுகளின் விலை மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியது. லாட்டரி சீட்டின் விலை உயர்வுக்கு பதிலாக பரிசுகளின்எண்ணிக்கையை குறைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.50 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கான முதல் பரிசு மாறாமல் இருக்கும். ரூ.5000 மற்றும் ரூ.1000 பிரிவுகளுக்கான வெற்றியாளர்களின் எண்ணிக்கை குறைப்பட்டுள்ளது. இதற்கு முன் 21,600 பேர் ரூ.5000 பரிசை வென்றனர், இனிமேல், 20,520 பேருக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு முன் 32,400 பேர் ரூ.1000 பரிசை வென்றனர், இது 27,000 பேராக குறைக்கப்பட்டது. இத்தகைய ஜிஎஸ்டி வரி விதிப்பால் வெற்றியாளர்கள், முகவர்கள், மற்றும் விற்பனையாளர்களுக்கு கிடைக்கும் தொகை குறையும் என்பது குறிபிடத்தக்கது.