சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்கு பார்வையோடு தலைமை தாங்கிய வழிநடத்திய பிரதமர் மோடிக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜிஎஸ்டி வரியை கட்டமைத்ததற்காக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் நன்றி. அத்தியாவசிய பொருட்கள், சுகாதாரம், வேளாண்மை, காப்பீடு ஆகியவற்றை எளிமைப்படுத்தும் இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும்,’என்று கூறியுள்ளார்.
+
Advertisement