பயிர்களுக்குத் தேவையான நீர், ஊட்டச்சத்து, சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொள்கின்றன. இதனால், பயிர்களுக்கு தேவையானவை பற்றாக்குறையாகவே இருக்கிறது. ரசாயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது வழக்கமாக இருந்தாலும், ரசாயனங்கள் சுற்றுச் சூழலை மாசு படுத்துவது கவலைக்குறியது. இதனால், சுற்றுச் சூழலை பாதிக்காமல், களைச் செடிகளை முற்றிலும் நீக்குவது சாத்தியமற்றது என்றபோதும், களைச்செடிகளின் எண்ணிக்கையைகட்டுக்குள் கொண்டுவருவது எளிது.
பயிர் சுழற்சி
பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்து பயிரிடும் முறையாகும். ஒரே பயிரை பயிரிடுவதால் களைச் செடிகளின் ஆதிக்கம் அதிகமாகும். இதனால், ஒரே நிலத்தில் அடுத்தடுத்து வேறுவேறு பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவது களைச்செடியை கட்டுப்படுத்தும். அதேபோல, பயிர் வகைகளை தேர்ந்தெடுக்கப்படும் பயிரைப் பொறுத்தே களைச் செடிகளின் தன்மை அமைகிறது. பயிர் சுழற்சியில் கொஞ்சும் தரிசு முறையையும் (பயிர் சாகுபடி செய்யாமல்) பயன்படுத்துவதன் மூலம் நீண்ட கால களைச் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மூடு பயிர்
சில பயிர்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும் தன்மையுடையன. இவை நிலத்தை மூடுவது போல வளர்ந்து களை வளர்ச்சியை தடுக்க வல்லது. சிவப்பு கிராம்பு, எண்ணெய் விதைச் செடிகள், தீவனப் பயிர்கள், முள்ளங்கி போன்றவை களை வளர்ப்பை கட்டுபடுத்தலாம்.
நிலத்தை மேற்பார்வையிடுதல்
களைச் செடி பற்றின விவரங்களை சேகரித்து அதை களை மேலாண்மை திட்டமிடுதலுக்கு பயன்படுத்துவது மிக அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் பயிரிழப்பையும், மகசூல் பாதிப்பையும் தவிர்க்கலாம்.
நிலப்போர்வை
நிலப்போர்வை, நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முலைப்பதை தவிர்க்க வல்லது. ஒளி ஊடுருவதை தடுப்பதால் களைச் செடிகள்கட்டுப்படுகின்றன.
வாழும் நிலப் போர்வைகள்
நிலத்தின் மட்டத்திற்கு அருகில் அடர்த்தியாக வளரும் தாவர வகைகள் இவை. எ.டு. கிராம்பு. இவை முக்கிய பயிருடன் போட்டியிடுவதில்லை. இவை களை, பூச்சி தொல்லைகளைக் கட்டுப்படுத்தும். மண் வளத்தையும் பெருக்கும்.
அங்கக நிலப் போர்வைகள்
வைக்கோல் புல், மரப்பட்டை, மட்கிய குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நிலப்போர்வையாக பயன்படுத்தலாம். இரண்டு அடுக்கு செய்தித்தாளை பயிர் வரிசையின் இடையில் விரித்து அதன் மேல் ஒரு அடுக்கு புல் பரப்புதல் ஒரு வகை வழக்கம். வைக்கோல் புல், களை விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம். இவை மட்கக் கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்தூர மரங்களின் இலை, பணை ஒலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
பயிர் வகை தேர்ந்தெடுத்தல்
களைக் கட்டுப்படுத்துவதில் பயிர் வகையும் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் பயிர், சற்று அடர்த்தியாக வளர்ந்து, பயிர் வரிசைக்கு உள்ள இடைவெளியை தனது நிழலால் நிரப்பக் கூடியது, அதனால் அவை நிச்சயமாக களை வளர்ப்பை கட்டுப்படுத்தும் களைச் செடிகள்நிழலின்றி வளர இயலாது.
உழவு முறை
களை வித்துக்கள் உழவு முறைக்குத் தகுந்தாற் போல் பரவிக்கிடக்கும்.பொதுவாக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்ட 5 செ.மீ ஆழம் வரை ஊடுருவியிக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துகள் சீராக பரவியிருக்கும். இவ்வாறு உழவு முறையின் அடிப்படையில் களை வித்துகளின் பரவுத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கட்டுப்படுத்தலாம்.
சுகாதாரம்
சுத்தமான பயிர் வித்துகளை உபயோகித்தல், புல் வெட்டுதல், முழுவதுமாக மட்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல், வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல், இது போன்ற முறைகளை பின்பற்றினால், களைத் தொல்லையை தவிர்க்கலாம். சுத்தமான கலப்பைகள் மற்றும் இயந்திரங்களை உபயோகித்தலும் அவசியம்.
தழைச்சத்து வளம்
ரசாயன தழைச்சத்து உரம், பயிர் மற்றும் களை வளர்ச்சியை பாகுபாடின்றி ஊக்குவிக்கும் களைச் செடிகள் , பயிர் செடிகளைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து விடும். ஆனால் பசுந்தலை உரம் களைச் செடி வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. அவை மண்ணில் மெதுவாக தழைச் சத்தினை வெளியிடுதல் , வேண்டாத களைச் செடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
களை வித்துகளை முளைக்கச் செய்தல்
பயிர் விதைத்தலுக்கு ஒரு சில நாட்களுக்கும் முன்பாக நீர் பாய்ச்சி, களை வித்துகளை முளைக்கச் செய்தல், களை மேலாண்மையில் ஒரு வளையாகும். அவ்வாறு முளைத்த களைச் செடிகளை அகற்றிவிட்டு, விரைவாக பயிர் செடிகளை நடுதல் வேண்டும். இது தட்ப வெப்ப நிலை மாற்றத்தினால் முளைக்கும் களைத் தொல்லையை தவிர்க்க உதவும்.
ஈரப்பதத்திற்கு தகுந்தாற்போல் விதைத்தல்
இம்முறையில் மேல் கூறியது போல, களைச் செடிகளை அகற்றி நிலத்தை காய விட வேண்டும். அவை நிலப் போர்வை போல் அமைந்துவிடும். பயிர் விதைக்கும் பொழுது, விதைக்குமிடத்தில், காய்ந்த மண்ணை அகற்றி விட்டு ஈரப்பதமான மண்ணில் விதைக்க வேண்டும். பெரிய விதை கொண்ட காய்களை, சோளம், பீன்ஸ் போன்றவற்றை இவ்வாறு விதைக்கலாம். இவை முளைத்து, அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு நிழல் தந்து, களை வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
