புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் பெருகி வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் மன அழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில், மாணவர்கள் தற்கொலைக்கு மத்தியில் பெருகி வரும் பயிற்சி மையங்களால் எழும் சமூக பிரச்னைகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாக மக்களவை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை கல்வி மற்றும் மாணவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நாடாளுமன்ற கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறைக்கான நிலைக்குழு ஆராய உள்ளது.
+
Advertisement



