5.51 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 50 காலிப் பணியிடங்களும், குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி அறிவித்தது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த மாதம்(ஆகஸ்ட்) 13ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி நேற்று வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் ஒரு முறை பதிவுத்தளத்தின் மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.