Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

சென்னை: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 தேர்வு, மாநிலத்திலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் ஒன்றாகும். மதிப்புமிக்க நிர்வாகப் பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 2025 சுழற்சிக்கான முதற்கட்டத் தேர்வு ஜூன் 15, 2025 அன்று நடைபெற்றது. இதில், உதவி இயக்குநர் , உதவி வனப் பாதுகாவலர், துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2.49 லட்சம் பேர் தேர்வெழுதினர். முதற்கட்டத் தகுதிப் பட்டியலை உள்ளடக்கிய TNPSC குரூப் 1 தேர்வு முடிவு 2025 ஆகஸ்ட் 2025 இல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (28.08.2025) இன்று வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வு சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வுக்கு செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்காக ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இவ்வாறு அறிவிக்கப்பட்டது.