புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா, தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்றுமுன்தினம் நடத்திய போது, அங்கு குஜராத்தின் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் திடீரென அவரை திட்டி, தலை முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார். இதை பார்த்ததும் முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய ரிசர்வ் காவல் படையினர் டெல்லி முதல்வருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.