இந்தியச் சந்தையில் கால் பதித்து 10 ஆண்டு நிறைவானதையொட்டி, ஹூண்டாய் நிறுவனம், கிரெட்டா கிங் மற்றும் கிரெட்டா கிங் லிமிடெட் எடிஷன் கார்களை கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. கிங் வேரியண்டில் 115 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், 116 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கும்.
கிங் லிமிடெட் எடிஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் சிவிடி மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். கிரெட்டா கிங் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.17.89 லட்சம் எனவும், லிமிடெட் எடிஷன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.19.64 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.