உலக அரங்கில் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பெருமைப்பட வைத்துள்ளார் ஆனந்த்குமார்: துணை முதல்வர் வாழ்த்து
சென்னை: உலக அரங்கில் தமிழ்நாட்டையும் இந்தியாவையும் ஆனந்த்குமார் பெருமைப்பட வைத்துள்ளார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவின் பெய்டஹேயில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025-ல் 1000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்த சென்னையைச் சேர்ந்த ஆனந்த்குமார் வேல்குமாருக்கு வாழ்த்துக்கள். SDAT-யின் மிஷன் சர்வதேச பதக்கத் திட்ட தடகள வீரரான இவர், ஒரு நாள் முன்பு 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் தொடர்ந்து பல விருதுகளைப் பெறட்டும் இவ்வாறு தெரிவித்தார்.