தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பெரிய குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி மயிலாத்தாள் (80), பேரன் விஜயகுமார் (40), ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். விஜயகுமார் போதைக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஊரை சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மயிலாத்தாள் தலையை அரிவாளால் வெட்டி துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் குண்டடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியின் தலையை துண்டித்து கொன்றுவிட்டு தலைமறைவான பேரன் விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
