சென்னை: அனைத்து மாவட்ட ஊராட்சி அமைப்புகளிலும் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அக்.2-ம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம் அக்.11ம் தேதி நடத்தப்படுகிறது. கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகள், கிராமத்தின் நிதி மற்றும் பொது செலவினம் குறித்து ஆலோசிக்கப்படும். டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சாதி பெயர் கொண்ட குக்கிராமம், சாலைகள், தெருக்களின் பெயர்கள் மாற்றுவது குறித்து விவாதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement