Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன; குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு எட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: குடிசை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10,000 கிராமங்களை ஒன்றிணைத்து முதன்முறையாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;

10,000க்கு மேற்பட்ட ஊராட்சிகளை இணையமூலமாக இணைந்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றேன். நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும் என வழிவகுத்தவர் அண்ணா. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றவேண்டும் என்பதை விதைத்தவர் அண்ணா என முதலமைச்சர் தெரிவித்தார்.

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு எட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

குடிசை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்தக் கட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் யாருக்கும் அலட்சியம் வேண்டாம். பிளாஸ்டிக் குப்பை பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

நீரை பணம் போல் செலவழிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கிராமங்களில் தண்ணீரை பணம் போல செலவழிக்க வேண்டும். கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. பெண்கள் முன்னேற்றத்தில் விடியல் பயண திட்டத்தால் மிகப்பெரிய பயன். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும்.

கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

பல்வேறு கிராம மக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சிகளில் மக்களுடன், கோவை வாரப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி மக்களுடன் மற்றும் தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி மக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் முடிவுற்ற பணிகள் குறித்த விவரங்களையும், கிராமங்களில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக மக்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.