“உங்களுக்கு என்ன பிரச்னை? உங்களுக்கு எங்க எரியுது?”- ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
ஈரோடு: எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆங்கில மொழியை படிக்கிறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்னை உங்களுக்கு எங்க எரியுது? என ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் பேசியதாவது;
"எங்க பசங்க உலக வாய்ப்புகளுக்காக ஆங்கில மொழியை படிக்கிறாங்க. அதுல உங்களுக்கு என்ன பிரச்னை உங்களுக்கு எங்க எரியுது?. அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்கிறார். தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரித்து ஆளுநர் ரவி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து பேசுகிறார். அவர் வகிக்கும் அரசியல் சாசன பதவிக்கு, துளியும் பொருத்தமற்ற தரக்குறைவான பேச்சு இது" என முதலமைச்சர் பேசினார்.


