சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் அரசின் மீது வழக்கம்போல குற்றம் சாட்டியுள்ளார். சனாதன வர்ணாசிரம கோட்பாட்டை தூக்கி பிடித்து, குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜ அரசின் ஊது குழலாக மாறி வருபவர் ஆளுநர் ரவி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முயலும் வஞ்சகர்களுக்கு துணை போகும் வேலையை செய்ய துணிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. திராவிட மாடல் அரசின் மீது காழ்ப்புணர்வுடன் குற்றம் சாட்டுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். மேலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு, பாஜவினர் காவி ஆடை அணிவித்தற்கும் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
+
Advertisement