ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு!!
சென்னை : ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசுதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவ. 2023 தேதியில், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.