ஆளுநர் அதிகாரம் குறித்து நீதிபதிகளின் தீர்ப்பு பற்றி விளக்கம் தரலாம், மாற்ற முடியாது : உச்சநீதிமன்றம்
டெல்லி : ஆளுநர் அதிகாரம் குறித்து நீதிபதிகளின் தீர்ப்பு பற்றி விளக்கம் மட்டுமே உச்சநீதிமன்றம் வழங்கும் என்று நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு ஏப்.8ல் வழங்கிய தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதா மீது ஆளுநர் 3 மாதத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.