சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறு பிரச்சாரத்தை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தி.க. சார்பில் கி.வீரமணி தலைமையில் ஆளுநரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி (திமுக), வீரபாண்டியன் (சிபிஐ), கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), ஜெ.ஹாஜாகனி (த.மு.மு.க.) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
+
Advertisement

