டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு நிர்ணயித்த கால அவகாசம் தேவையான ஒன்றுதான் என தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். மேலும், ஆளுநருக்கு 3 மாத காலம் நிர்ணயித்தது மூலம் போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல்சாசனம் 142வது பிரிவின்படி உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியும். பேரறிவாளன் உள்ளிட்ட பல வழக்குகளில் சிறப்பு அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
+
Advertisement