சென்னை : திராவிட மாடல் அரசு மீது ஆளுநர் ரவி காழ்ப்புணர்வுடன் குற்றம்சாட்டியுள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "பாஜகவின் ஊதுகுழலாக மாறி விஸ்வகர்மா திட்டத்தை ஆதரித்து பேசி வருபவர் ஆளுநர் ரவி. பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளுநர் ரவி வழக்கம்போல் குற்றம்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்து பேசி வருவது கடும் கண்டனத்துக்குரியது,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement