சென்னை: போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு முதற்கட்டமாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் எதிரொலியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்து கழகங்களில் 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்க ரூ265.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நேற்று ஆக.18-ந் தேதி மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு இந்த காத்திருப்புப் போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று போக்குவரத்து கழகத்தில் 2023-25-ல் ஓய்வு பெற்ற அனைவருக்கும் வூதிய பலன்கள் கிடைக்க ரூ265.44 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.