கொரோனா பணியில் இறந்த மருத்துவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை
சென்னை : அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பணியில் இறந்த 10 மருத்துவப் பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் கருணைத் தொகை விரைவில் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். அதே போல தமிழகத்தில் கொரோனா பணியில் இறந்த மருத்துவர்களுக்கு கருணைத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக தமிழகத்தில் உள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. அதனால் ஏற்கனவே இருக்கின்ற அரசாணையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.