Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளிகளில் 1996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்

1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Assistant).

2. உடற்கல்வி இயக்குநர் (Physical Director- Grade-1)

3. கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர் (Computer Instructor- Gradei1).

பாடவாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள், காலியிடப் பகிர்வு ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.36,900-1,16,600. வயது: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 53 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/அருந்தியர்/சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:

1. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்:

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உடற்கல்வி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டமும், பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

2. உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1). உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல்/ சுகாதாரத்துறை சார்ந்த பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டமும், பி.பிஎட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்: (கிரேடு-1): கம்்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டமும், மேலும் பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் (Teachers Recruitment Board) நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வான தமிழ் மொழித் திறன் தேர்வில் முக்கிய பாடங்களிலிருந்து கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு செப்.28ம் தேதி நடைபெறும்.

கட்டணம்: எஸ்சி/ அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.300/-. இதர பிரிவினருக்கு ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2025.