கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்தியாவிலே வருந்தக்கூடிய சம்பவம் கரூரில் நடந்துள்ளது. வருங்காலங்களில் இது போன்ற அரசியல் கட்சி கூட்டங்களில் உயிரிழப்புகள் இல்லாமல் காவல்துறை பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அரசியல்வாதிகளும் கட்சி நிர்வாகிகளும் பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்.
கட்டாயம் கூட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அரசு சரியாகத்தான் செயல்பட்டுள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை. பொதுமக்களின் உயிர்கள் தான் முக்கியம். என்னுடைய கட்சியை சேர்ந்த நிர்வாகி குடும்பத்தினரும் ஒருவர் இறந்துள்ளார். அதைப் பார்க்க தான் நான் வந்திருக்கிறேன். இறந்த உயிர்களை என் குடும்பத்தில் ஒருவராக தான் நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.