முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(30). பாஜ ஊடக பிரிவு ஐடிவிங் ஒன்றிய தலைவர். இவர் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தமிழக அரசையும், காவல்துறையையும் இணைத்து அவதூறாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக திமுக நகர ஐடிவிங் பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் புகாரின்படி முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்துவை நேற்று கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை விடுவிக்க கோரி பாஜ சார்பில் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டதாக ஒன்றிய தலைவர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.
+
Advertisement 
 
  
  
  
   
