சென்னை: கடந்த 2018ல் ஓ.எம்.ஆரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி தரமணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.