Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் கொடிநாள் ஊர்வலம் முன்னாள் படை வீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் படை வீரர் கொடி நாள் ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கடந்த 1949 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் நாளன்று படைவீரர் கொடி நாள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதியை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து படைவீரர் கொடிநாள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முன்னாள் படை வீரர்களுக்கான தேநீர் விருந்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.

அப்போது, கலெக்டர் தர்ப்பகராஜ் பேசியதாவது:

முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். முன்னாள் படை வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் முத்தாய்ப்பாக செயல்படுத்த படுகிறது.சுயதொழில் தொடங்க நிதி உதவி, வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள், சொத்து வரி விலக்கு, மானிய நிதி உதவிகள் மற்றும் மறுவாழ்வு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து, திருமண நிதியுதவி தொகை 2 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம், கல்வி உதவித்தொகை 5 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் ஒரு நபருக்கு போர் விதவையர்கள் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களின் மகள்களின் திருமணத்திற்காக தொகுப்பு நிதியிலிருந்து 8 கிராம் தங்க நாணயம் ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சுரேஷ் நாராயணன், ஆர்டிஓ ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆரணி:ஆரணி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

மண்டல துணை தாசில்தார் விஜயராணி, இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், எஸ்ஐ ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆர்டிஓ சிவா கலந்து கொண்டு கொடிநாள் வசூல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கொடி நாள் நிதி வழங்கினார். இதில், வருவாய்துறை, காவல்துறை, பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் படை வீரர் கொடிநாள் நிதி திரட்டும் பேரணியை தாசில்தார் வே.இராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் சீனுவாசன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், இளநிலை வருவாய் ஆய்வாளர் கோவிந்தன், விஏஓக்கள் சுப்பிரமணி, பிரவின்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நேற்று கொடிநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கிராம இளைஞர்கள் 20அடி உயரம், 30அடி அகலம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியை பிடித்து, இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகங்களையும் போற்றும் வகையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் கொடிநாளுக்கு நிதி வழங்கினார்கள்.