வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் அரசுக்கு ரூ.274 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை புதிய சாதனை!!
சென்னை: பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் ரூ.274 கோடி அரசுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. முகூர்த்த தினமான நேற்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2025-26ம் ஆண்டில் ஏப்ரல் 30ல் ஒரே நாளில் ரூ.272 கோடி வருவாய் கிடைத்ததே அதிகமாக இருந்தது.