திட்டக்குடி அருகே கீழெருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரியை புனரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
கடலூர்: திட்டக்குடி அருகே கீழெருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் ஏரியை புனரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கால்வாயின் கரைகளை சீரமைக்க ரூ.74 கோடி, முதன்மை கால்வாயை சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உபரி நீர் கால்வாய்களை சீரமைக்க ரூ.30 கோடி என மொத்தம் ரூ.130 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளை கடந்த வெலிங்டன் ஏரியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வெலிங்டன் ஏரி புனரமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஏரியை சீரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கியது.