சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இரு மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மீதமுள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சில துறைகளில் 95 சதவீதம் வரை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் காலி பணியிடங்களுக்கு உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறினார்.

