*வட்டார கல்வி அலுவலர் ஆலோசனை
செங்கம் : செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் வாசுதேவன்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஷகிலா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடந்த 2024- 2025 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பள்ளி தோழன் செயலி குறித்தும், பள்ளியில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களும், பள்ளி மாணவர்களின் கல்வித் திறன், எண்ணும் எழுத்தும் நடைமுறை, மாணவர்கள் வருகை, சேர்க்கை மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஆய்வின்போது பெண்கள் அதிகாரமளித்தலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பின் மூலம் ‘அனைத்தும் அவளே திட்டம்’ செயல்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆய்வின்போது ஆசிரியர் பயிற்றுநர் சின்னராஜ், பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆ.ராமராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகன் மற்றும் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, அமைப்பாளர் உஷா, அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.