பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 4,997 பயனாளிகளுக்கு 215.71 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர்..!!
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (9.9.2025) காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 12.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 25.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 4,997 பயனாளிகளுக்கு 215.71 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், ஆரியம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 30.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், ஊத்துக்காடு ஊராட்சியில் 14.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தையும், பரந்தூர் ஊராட்சியில் 32.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இரண்டு வகுப்பறை கட்டடங்களையும், வில்லிவலம் ஊராட்சியில் 30.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், நாயக்கன் குப்பம் ஊராட்சியில் 30.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 10.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துமனை கட்டடத்தையும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், கிளக்கடி ஊராட்சியில் 35.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தையும், ஒழையூர் ஊராட்சியில் 35.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தையும், நத்தநல்லூர் ஊராட்சியில் 38.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தையும் என மொத்தம் 12.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் ஏகனாம்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 98.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கூடுதல் கட்டடம், உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 148.44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 வகுப்பறை கூடுதல் கட்டடம், நாயகன்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் 74.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கூடுதல் கட்டடம். திருப்புலிவனம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 49.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கூடுதல் கட்டடம், அறப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 148.44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 வகுப்பறை கூடுதல் கட்டடம், தென்னேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 74.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கூடுதல் கட்டடம், கம்மாளம்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 108.79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கூடுதல் கட்டடம், ஒரகாட்டுப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 74.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கூடுதல் கட்டடம், திருப்புட்குழி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 98.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கூடுதல் கட்டடம்.
மேன்னலூர் ஊராட்சியில் 374.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உத்திரமேரூர் ஏரி உபரி வாய்க்காலின் குறுக்கே உயர் மட்ட பாலம், ஒழையூர் ஊராட்சியில் 490.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒழையூர் ஏரியின் குறுக்கே உயர் மட்ட பாலம். இலுப்பப்பட்டு ஊராட்சியில் 741.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குதிரைக்கால் மடுவு குறுக்கே உயர் மட்ட பாலம், ஏனாத்தூர் ஊராட்சியில் 45.00 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டடம் என மொத்தம் 25.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் வருவாய்த்துறையின் சார்பில் 3,846 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 50 நபர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு தானியங்கி மற்றும் பேட்டரி பொருத்தப்பட்ட நான்கு சக்கர நாற்காலிகளையும்.. சமூக நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 17 பயனாளிகளுக்கு வைப்பு பத்திரங்களையும், வேளாண்மை
பொறியியல் துறையின் சார்பில் 6 விவசாயிகளுக்கு டிராக்டர்களையும், 5 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 6 தொழில்முனைவோருக்கு காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் மானிய உதவிகளையும், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய வாகனங்ளையும், 7 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும், பல்வேறு வங்கிகளின் மூலமாக 157 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதற்காக கடனுதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 181 பயனாளிகளுக்கு பயிர்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 51 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள், தார்பாய் மற்றும் விதைகளையும்,
தோட்டக்கலைத்துறையின் சார்பில் 9 விவசாயிகளுக்கு தோட்டக்கலை உபகரணங்கள் மற்றும் விற்பனை வாகனங்களையும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 600 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் என மொத்தம் 4,997 பயனாளிகளுக்கு 215.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்கள். குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர், திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன். இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.