Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மதுராந்தகத்தில் அரசு பேருந்து விபத்து: 5 பயணிகள் காயம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் புதிய சுரங்கப்பாதை அமைப்பதற்காக, சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் ஜிஎஸ்டி சாலை குறுகியுள்ளதால், அனைத்து வாகனங்களும் மெதுவாக கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து நேற்றிரவு அரசு பேருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

இன்று அதிகாலை மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது, அங்கு சாலை குறுகி இருந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புகளை இடித்தபடி, அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவரின்மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், அரசு பேருந்தின் முன்பக்க பகுதி பலத்த சேதமடைந்தது. இவ்விபத்தில், பேருந்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனால் திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்துக்கு உள்ளான அரசு பேருந்தை கிரேன் மூலம் அகற்றி, வாகன போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அனைத்து பயணிகளையும் மாற்று பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.