கூகுள் மேப்ஸ் இந்திய பயனர்களுக்காக Gemini AI, மெட்ரோ டிக்கெட் முன்பதிவு, போக்குவரத்து அப்டேட்ஸ் உள்ளிட்ட 10 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மேப்ஸ் இப்போது ஜெமினி AI-யை நேரடியாக ஒருங்கிணைப்பதால், பயனர்கள் தங்கள் தொலைபேசியை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபடலாம். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்ஸ்களை வழங்குவதால் தாமதங்களை தவிர்க்க உதவும். இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள பயனர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும், பேருந்துகள், ரயில்கள் உட்பட அனைத்து போக்குவரத்து டிக்கெட்டுகளையும் கூகுள் வாலட்டிற்குள் சேமித்து தங்களது பயணத்தின்போது எளிதில் அணுக முடியும். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும். பிரபலமான உணவகங்கள், Hidden Gems என போற்றப்படும் உள்ளூர் பகுதிகளையும் பயனர்களுக்கு எளிதாக வழங்கும் வகையில் கூகுள் Maps இப்போது அப்டேட்களை வழங்கியுள்ளது.


