ஜெய்ப்பூர் : ராஜஸ்தான், சிட்டோர்கர் மாவட்டத்தில் கூகுள் map தவறாக வழிகாட்டியதால் வேன் கவிழ்ந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஜெய்ப்பூரை சேர்ந்த 9 பேர் ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் நோக்கி இரவில் வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். பராமரிப்புப் பணியால் சில மாதங்களாக மூடி இருந்த பாலத்தை திறந்திருப்பது போல் கூகுள் map காட்டியதால் வேனை பாலத்தை நோக்கி இயக்கியுள்ளார். சேதமடைந்த பாலத்தில் இருந்து வேன் கவிழ்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
+
Advertisement